'பூவே உனக்காக' தொடரிலிருந்து அருண் விலகல்

'பூவே உனக்காக' தொடரிலிருந்து அருண் விலகல்
Updated on
1 min read

'பூவே உனக்காக' தொடரிலிருந்து விலகுவதாக அருண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சன் டிவியில் ஒளிபரப்பி வரும் தொடர் 'பூவே உனக்காக'. இதில் ராதிகா ப்ரீத்தி, ஸ்ரீனிஷ் அரவிந்த், அருண் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். தற்போது இந்த தொடரிலிருந்து அருண் விலகுவதாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அருண் வெளியிட்டுள்ள சிறு அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"பூவே உனக்காக தொடரிலிருந்து நான் விலகுகிறேன் என்பதை உங்கள் அனைவருக்கும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இனி என்னை நீங்கள் கதிர் கதாபாத்திரத்தில் பார்க்க முடியாது.

இந்தச் சிறந்த வாய்ப்பைத் தந்த தயாரிப்பாளருக்கும், சன் டிவிக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன். உங்கள் ஆதரவின்றி நான் இன்று இருக்கும் இந்த நிலைக்கு என்னால் வந்திருக்க முடியாது.

எனக்குத் தொடர்ந்து ஆதரவும் அன்பும் அளித்து வரும் எனது நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன். கவலைப்படாதீர்கள் மக்களே. விரைவில் உங்கள் அனைவரையும் ஒரு நல்ல செய்தியுடன் சந்திக்கிறேன். மீண்டும் உங்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் அன்பும் ஆதரவும் எனக்கு என்றும் தேவை"

இவ்வாறு அருண் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in