தயாரிப்பாளர் ஜி.ராமசந்திரன் காலமானார்

தயாரிப்பாளர் ஜி.ராமசந்திரன் காலமானார்

Published on

நடிகரும் தயாரிப்பாளருமான ஜி.ஆர் என்கிற ஜி.ராமசந்திரன் காலமானார். அவருக்கு வயது 73.

‘களத்தூர் கண்ணம்மா’, ‘நாட்டுப்புற பாட்டு’, ‘எட்டுபட்டி ராசா’, ‘வீர தாலாட்டு’, ‘ராஜாதி ராஜா’, ‘மனுநீதி’ உள்ளிட்ட பல்வேறு தமிழ் நடித்தவர் ஜி.ராமசந்திரன். இது தவிர தனது ஜி.ஆர்.கோல்டு பிலிம்ஸ் சார்பாக ‘மனுநீதி’, ‘சவுண்ட் பார்ட்டி’, ‘காசு இருக்கணும்’, ‘எங்க ராசி நல்ல ராசி’, ‘காதலி காணவில்லை’ உள்ளிட்ட பல்வேறு படங்களை தயாரித்துள்ளார். பல்வேறு கன்னடப் படங்களில் நடித்தும் தயாரித்தும் இருக்கிறார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ராமச்சந்திரன் இன்று (02.06.21) அதிகாலை காலமானார். கடந்த சில தினங்களுக்கு முன்புதான் அவரது மனைவி ஆர்.பி. பூரணி மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு சிவகுமார், சாமி குமார் என்கிற இரு மகன்கள் உள்ளனர்.

ஜி. ராமச்சந்திரனின் இறுதிச் சடங்குகள் இன்று மாலை மாங்காட்டில் உள்ள அவரது பண்ணை தோட்டத்தில் நடைபெறவுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in