அடுத்தடுத்து 5 படங்கள்

அடுத்தடுத்து 5 படங்கள்
Updated on
1 min read

ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அடுத்தடுத்து 5 படங்கள் தயாரிக்கிறார். இவை அனைத்தும் சிறிய பட்ஜெட் படங்கள்என்று கூறப்படுகிறது. பெரும்பாலும் புதிய இயக்குநர்களுக்கு இதில் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. ஒவ்வொருவரும் முழு கதையையும் ஒப்படைத்து அதற்கான முதல்கட்ட வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். ஊரடங்கு முடிவுக்கு வந்ததும் இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. ‘கோமாளி’ திரைப்படத்தை இயக்கிய பிரதீப் ரெங்கநாதன் இதில் ஒரு படத்தை இயக்க உள்ளார். அதற்கான முதல்கட்ட வேலைகளை படக் குழுவினர் தொடங்கியுள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in