கோவிட் தொடர்பான நல உதவி: புதிய அமைப்பைத் தொடங்கும் நிதி அகர்வால்

கோவிட் தொடர்பான நல உதவி: புதிய அமைப்பைத் தொடங்கும் நிதி அகர்வால்
Updated on
1 min read

நடிகை நிதி அகர்வால், கோவிட் தொடர்பான நல உதவிகளைச் செய்ய புது அமைப்பு ஒன்றைத் தொடங்கவுள்ளார். Distribute Love என்கிற பெயரில் இந்தத் தொண்டு நிறுவனம் அமையவுள்ளது.

இதற்கான இணையதளத்தில் வரும் ஒவ்வொரு கோரிக்கையையும் பார்க்கத் தனியாக ஒரு அணியை அமைத்துள்ளதாக நிதி அகர்வால் கூறியுள்ளார்.

இதுகுறித்து ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில், "நான் தொண்டு நிறுவனம் ஒன்றைத் தொடங்குகிறேன். அதன் இணையதளத்தில் மக்கள் அவர்களின் கோரிக்கைகளை வைக்கலாம். முடிந்த உதவிகள் அத்தனையும் அவர்களுக்கு வழங்கப்படும். அது அடிப்படைத் தேவையாக இருக்கலாம், மருந்துகளாக இருக்கலாம்.

குறிப்பாக இது கோவிட் தொடர்பான உதவிகளுக்காக தொடங்கப்படுகிறது. என்னுடன் ஒரு அணியை அமைத்துள்ளேன். அவர்கள் மூலம் ஏற்பாடுகள் நடக்கும். ஆயத்தப் பணிகள் முடிந்து வேலை தொடங்கியவுடன் வந்திருக்கும் கோரிக்கைகளைப் பார்த்து அதற்கேற்ப நடவடிக்கை எடுப்போம்" என்று நிதி அகர்வால் கூறியுள்ளார்.

2017ஆம் ஆண்டு 'முன்னா மைக்கேல்' என்கிற இந்திப் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நிதி அகர்வால். தமிழில் 'ஈஸ்வரன்', 'பூமி' என அடுத்தடுத்த படங்களில் நடித்தார். தற்போது மகிழ் திருமேனி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in