இதுவே என் பிறந்தநாளுக்கு நீங்கள் தரும் பரிசு - ரசிகர்களுக்கு கார்த்தி வேண்டுகோள்

இதுவே என் பிறந்தநாளுக்கு நீங்கள் தரும் பரிசு - ரசிகர்களுக்கு கார்த்தி வேண்டுகோள்
Updated on
1 min read

நாடு முழுவதும் கரோனா வைரஸ் 2-வது அலை மிகவேகமாக பரவி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் தினசரி பாதிப்பு மளமளவென அதிகரித்தது. ஒரு கட்டத்தில் தினமும் 4 லட்சத்துக்கு மேற்பட்டோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். கரோனா பரவலைத் தடுக்க பல மாநிலங்கள் ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தற்போது நாடு முழுவதும் தினசரி பாதிப்பு குறைந்தாலும் முற்றிலுமாக கரோனா அச்சுறுத்தல் விலகவில்லை.

இந்நிலையில் இன்று (25.05.2021) பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் கார்த்தி தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். இது தனது ரசிகர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:

அன்புத் தம்பிகள் அனைவருக்கும் வணக்கம்!

இந்த கரோனா சூழல் இதுவரை நாம் கண்டிராத அளவுக்கு மிகக் கடுமையாக உள்ளது! அரசாங்கமும், மருத்துவர்களும் நமக்கு அறிவித்துள்ள, 'மாஸ்க் அணிதல், சானிடைசர் பயன்படுத்தல், தனி மனித இடைவெளியைக் கடைபிடித்தல், வசிப்பிடத்தை விட்டு வெளியே செல்லாமல் இருத்தல் போன்ற பாதுகாப்பு விதிமுறைகளை தவறாமல் பின்பற்றி; தம்பிகள் ஒவ்வொருவரும் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்'. இதுவே இந்தப் பிறந்தநாளுக்கு எனக்கு நீங்கள் தரும் பரிசாக இருக்கும்!

இவ்வாறு கார்த்தி கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in