

திருக்குமரன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் 'கெத்து' படத்தின் இசை டிசம்பர் 25ம் தேதி வெளியாகிறது. 2016 ஜனவரியில் படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.
உதயநிதி ஸ்டாலின், ஏமி ஜாக்சன், கருணாகரன், விக்ராந்த் உள்ளிட்ட பலர் நடிக்கும் 'கெத்து' படத்தை இயக்கி வருகிறார் திருக்குமரன். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வரும் இப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி கொச்சின், கோவா உள்ளிட்ட பல பகுதிகள் நடைபெற்றது. இறுதிகட்டப் பணிகள் முடிந்து, படத்தை டிசம்பர் 18 அல்லது டிசம்பர் 24ம் தேதி படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது. கடும் மழையினால் டிசம்பர் வெளியீட்டில் இருந்து 'கெத்து' பின்வாங்கியது.
தற்போது இப்படத்தின் இசையை டிசம்பர் 25ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. 2016 ஜனவரியில் படத்தை வெளியிட உதயநிதி ஸ்டாலின் முடிவு செய்திருக்கிறார். இப்படத்தின் ட்ரெய்லருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.