

ஸ்டன்ட் சில்வா இயக்கத்தில் சமுத்திரகனி, ரீமா கல்லிங்கல், பூஜா கண்ணன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகிவரும் பெயரிடப்படாத புதிய படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்துள்ளது. இப்படத்தின் கதையை இயக்குநர் விஜய் எழுத, மற்றொரு இயக்குநர் சுப்ரமணிய சிவா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அப்பா - மகள் பாசப் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தை, முழுக்க பொள்ளாச்சியில் படமாக்கியுள்ளார் இயக்குநர். தற்போது முழு படப்பிடிப்பு வேலைகள் முடிந்து டப்பிங், எடிட்டிங் வேலைகளை தொடர்ந்து இறுதிகட்ட இசை பணிகள் நடந்து வருகின்றன. சண்டை இயக்குநராக பல படங்களில் பணிபுரிந்த ஸ்டன்ட் சில்வா இப்படத்தில் அறிமுக இயக்குநராக களமிறங்கி இருப்பதும், நடிகை சாய் பல்லவியின் தங்கைதான் பூஜா கண்ணன் என்பதும் குறிப்பிடத்தக்கது.