அதிக ஜாக்கிரதையாக இருந்தும் கரோனா தொற்று: நடிகை சுனைனா பகிர்வு

அதிக ஜாக்கிரதையாக இருந்தும் கரோனா தொற்று: நடிகை சுனைனா பகிர்வு
Updated on
1 min read

தனக்கு கரோனா தொற்று இருப்பதை உறுதி செய்து நடிகை சுனைனா பதிவிட்டுள்ளார்.

இந்தியாவில் கரோனா 2-வது அலையின் தீவிரம் மிகக் கடுமையாக உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. திரையுலகில் பல்வேறு பிரபலங்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

தற்போது நடிகை சுனைனா தனக்கு கரோனா தொற்று இருப்பதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். "அனைவருக்கும் வணக்கம். அதிக ஜாக்கிரதையாக இருந்தும் எனக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளது. வீட்டில் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன். அத்தனை விதிமுறைகளையும் பின்பற்றி வருகிறேன்.

என் குடும்பத்தினர் தவிர யாருடனும் நான் தொடர்பில் இல்லை. அவர்கள் அனைவரும் தனிமையில் உள்ளனர். எனது சமூக வலைதளப் பக்கங்களை மொத்தமாக ஒதுக்கிவைத்துவிட்டு ஓய்வெடுக்க வேண்டும் என்கிற விருப்பம் இருந்தாலும், தேவை இருப்பவர்களுக்கு சிறிய அளவிலோ, பெரிய அளவிலோ உதவியாக இருக்கும் விஷயங்களைப் பகிரும் வாய்ப்பை நான் இழக்க விரும்பவில்லை.

தயவுசெய்து முகக் கவசம் அணியுங்கள், வீட்டிலேயே இருங்கள், உயிர்களைக் காப்பாற்றுங்கள். நான் அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன்" என்று சுனைனா இந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in