

பழம்பெரும் நடிகர் ஜோக்கர் துளசி கரோனா தொற்றால் காலமானார்.
தமிழ் சினிமாவின் பிரபல் நடிகர் ஜோக்கர் துளசி. நாடக நடிகரான இவர் 1976ஆம் ஆண்டு வெளியான ‘உங்களில் ஒருத்தி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். 45 ஆண்டுகளாக பல்வேறு திரைப்படங்கள், தொலைகாட்சி தொடர்கள் ஆகியவற்றில் நடித்துள்ளார் துளசி. ‘கோலங்கள்’, ‘வாணி ராணி’, ‘கஸ்தூரி’, ‘அழகு’ ஆகிய சீரியல்களில் இவர் நடித்த கதாபாத்திரங்கள் பிரபலமானவை. இறுதியாக ‘தந்துவிட்டேன் என்னை’ என்ற வெப் சீரியலில் நாயுடு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சமீபத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட துளசி மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் நேற்று (மே 09) ஜோக்கர் துளசி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு நடிகை ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இரங்கள் தெரிவித்துள்ளனர்.