நடிகை நமீதாவின் நடன நிகழ்ச்சி ரத்து: ரசிகர்கள் ஆத்திரம்

நடிகை நமீதாவின் நடன நிகழ்ச்சி ரத்து: ரசிகர்கள் ஆத்திரம்
Updated on
1 min read

காரைக்காலில் இயங்கிவரும் உள்ளூர் வார இதழ் ஒன்றின் சார்பில் நடிகை நமீதா உள்பட நடனப் பிரபலங்கள் பங்கேற்கும் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.

1,000 பேருக்கும் மேல் நிகழ்ச்சியைப் பார்க்க டிக்கெட் வாங்கியிருந்தனர். 100 ரூபாய் முதல் ஐநூறு ரூபாய் வரை டிக்கெட்டுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டிருந்தது.

திட்டமிட்டபடி ஞாயிறு இரவு 8 மணி அளவில் நிகழ்ச்சி தொடங் கியது. நமீதாவை காண ரசிகர்கள் ஆவலுடன் திரண்டிருந்தனர்.

சிறிது நேரம் பொறுமை காத்த ரசிகர்கள் நமீதா வராததால் மேடையை நோக்கி கற்களை வீசி ரகளையில் ஈடுபட்டனர். போலீஸார் வந்து அவர்களை வெளியேற்றினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in