தங்கையின் கணவர் கரோனாவுக்கு பலி: பால சரவணன் வேண்டுகோள்

தங்கையின் கணவர் கரோனாவுக்கு பலி: பால சரவணன் வேண்டுகோள்
Updated on
1 min read

தங்கையின் கணவர் கரோனாவுக்கு பலி ஆனதைத் தொடர்ந்து, பால சரவணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியாவில் கரோனா 2-வது அலையின் தீவிரம் மிக கடுமையாக உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. திரையுலக பிரபலங்கள் பலருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்த் திரையுலகில் நேற்று (மே 6) ஓரே நாளில் பாடகர் கோமகன், நடிகர் பாண்டு உள்ளிட்டோர் கரோனா தொற்றுக்குப் பலியாகினர். மேலும், பிரபலங்கள் பலரும் படப்பிடிப்பு அனைத்தையும் ரத்து செய்துவிட்டு வீட்டிலேயே இருக்கிறார்கள்.

இதனிடையே, நடிகர் பால சரவணனின் தங்கை கணவர் கரோனாவுக்கு பலியாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து தனது சமூக வலைதள பதிவில் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக பால சரவணன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"அன்பு நண்பர்களே...இன்று எனது தங்கையின் கணவர் கரோனா காரணமாக இறந்துவிட்டார். 32 வயது. தயவு கூர்ந்து மிகக் கவனமாக இருக்கவும். நமக்கெல்லாம் வராது என்று நினைப்பது மாபெரும் கோழைத்தனம். நம்மைப் பாதுகாக்க நம்மால் மட்டுமே முடியும். முக கவசம் அணிவீர். ப்ளீஸ்"

இவ்வாறு பால சரவணன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in