உன் மறைவு நம்பமுடியவில்லை: பாரதிராஜா இரங்கல்

உன் மறைவு நம்பமுடியவில்லை: பாரதிராஜா இரங்கல்
Updated on
1 min read

இயக்குநர் கே.வி.ஆனந்த் மறைவுக்கு பாரதிராஜா இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரபல இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் இன்று (ஏப்.30) அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்தார். நள்ளிரவில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும், தானே காரை ஓட்டிக் கொண்டு தனியார் மருத்துவமனைக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது. பின்பு அதிகாலை 3 மணியளவில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு கே.வி.ஆனந்த் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

கே.வி.ஆனந்த் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இயக்குநர் பாரதிராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

இந்தியாவின் தலைசிறந்த ஒளிப்பதிவாளர், இயக்குநர், தமிழனுக்கு பெருமைச் சேர்த்த பேரன்பு கொண்ட கே.வி. ஆனந்த். உன் மறைவு நம்பமுடியவில்லை, அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்துக்கும், திரையுலகத்துக்கும், ஆழ்ந்த இரங்கல்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஒளிப்பதிவாளராக தனது திரைப் பயணத்தைத் தொடங்கிய கே.வி.ஆனந்த் பின்னர் 'கனா கண்டேன்' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து ‘அயன்’, ‘கோ’, ‘கவன்’ ‘காப்பான்’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in