Published : 26 Apr 2021 03:17 AM
Last Updated : 26 Apr 2021 03:17 AM

கதை திருத்தத்தில் லோகேஷ்

கமல்ஹாசனுடன் இணைந்து பணியாற்ற உள்ள‘விக்ரம்’ பட வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். தேர்தல் முடிந்து படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டிருந்தனர். இந்த நிலையில், முழு கதையையும் படித்த கமல்ஹாசன் சில இடங்களில் திருத்தங்கள் சொல்ல, திருத்தும் பணிகளை மேற்கொண்டுள்ளார் லோகேஷ் கனகராஜ். தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு முழு வேகத்துடன் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

இதற்கிடையே, படத்தில் கமலுடன் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபுதேவா நடிப்பதாக இருந்தது. அந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைய, ராகவா லாரன்ஸிடம் பேசினர். அதுவும் சரிவராத நிலையில், தற்போது அந்த பாத்திரத்தில் விஜய்சேதுபதி நடிப்பது உறுதியாகியுள்ளது. இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் பகத்பாசில் நடிக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x