

தமிழில் ‘காதல் கண்கட்டுதே’, ‘அடுத்த சாட்டை’,‘நாடோடிகள் 2’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் அதுல்யா ரவி. தற்போது ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், அதுல்யாவின் பெயரில் போலியாக முகநூல் பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதுபற்றி ட்விட்டரில் அதுல்யா ரவி கூறியுள்ளதாவது:
முகநூலில் என் பெயரில் போலியாக ஒரு பக்கம் தொடங்கி, எனக்கு தெரிந்த நபர்களுக்கு ஏன் செய்தி அனுப்புகின்றனர் என்று தெரியவில்லை. இது மோசமான செயல். இதுகுறித்து ஏற்கெனவே புகார் அளித்துவிட்டேன். நான் முகநூலில் இல்லை என்பதை தெரிவிக்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அவரது புகாரை அடுத்து, அந்த போலி முகநூல் பக்கம் நீக்கப்பட்டுள்ளது.