எம்.எஸ்.பாஸ்கர் மகள் திருமணம்: பிரபலங்கள் வாழ்த்து

எம்.எஸ்.பாஸ்கர் மகள் திருமணம்: பிரபலங்கள் வாழ்த்து
Updated on
1 min read

சென்னையில் நடைபெற்ற குணச்சித்திர நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகளின் திருமணத்தில் திரைப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார்கள்.

தமிழ்த் திரையுலகில் முன்னணி குணச்சித்திர நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் எம்.எஸ்.பாஸ்கர். முன்னணி நடிகர்கள் அனைவருடன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவருடைய மனைவியின் பெயர் ஷீலா பாஸ்கர்.

எம்.எஸ்.பாஸ்கர் - ஷீலா தம்பதியினருக்கு ஐஸ்வர்யா என்ற மகளும், ஆதித்யா பாஸ்கர் என்ற மகனும் இருக்கிறார்கள். இதில் '96' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஆதித்யா பாஸ்கர் என்பது குறிப்பிடத்தக்கது. எம்.எஸ்.பாஸ்கரின் மகள் ஐஸ்வர்யா விஸ்காம் படித்துள்ளார். இவருக்கும் தொழிலதிபர் என்.ஏ.சுதாகரின் மகன் அகுல் சுதாகரும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

ஐஸ்வர்யா - அகுல் சுதாகர் இருவரின் திருமண வரவேற்பு நேற்று (ஏப்ரல் 21) மாலை நடைபெற்றது. வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.

இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர்கள் சரத்குமார், விஜய்சேதுபதி, விஜய் ஆண்டனி, டி.ராஜேந்தர், நாசர், ராதாரவி, அருண்விஜய், ஆனந்தராஜ், பிரசன்னா, பரத், மனோபாலா, இளவரசு, மயில்சாமி, ரமேஷ் கண்ணா, கருணாஸ், ஆர்.பாண்டியராஜன், சூரி, நடிகைகள் சினேகா, தேவதர்ஷினி, குட்டிபத்மினி, சந்தியா, இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், விக்ரமன், வி.சேகர், சித்ரா லட்சுமணன், ஆர்.பாண்டிராஜ், மோகன்ராஜா, தயாரிப்பாளர் எடிட்டர் மோகன், டி.சிவா, தனஞ்செயன், இசையமைப்பாளர் தேவா, பாடகர் மனோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

திருமண வரவேற்புக்கு வந்தவர்களை எம்.எஸ்.பாஸ்கர், ஷீலா பாஸ்கர், என்.ஏ.சுதாகர், சீனா சுதாகர், ஆதித்யா பாஸ்கர், அக்சய் சுதாகர் ஆகியோர் வரவேற்றனர்.

திரையுலக பிரபலங்கள் கலந்துக் கொண்ட ஆல்பத்தைக் காண: CLICK HERE

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in