வீரப்பனின் கஜானா!

‘வீரப்பனின் கஜானா’ படத்தில் ஒரு காட்சி.
‘வீரப்பனின் கஜானா’ படத்தில் ஒரு காட்சி.
Updated on
1 min read

பிரபாதீஸ் ஷாம்ஸ், ‘ராட்சசி’ திரைப்பட இயக்குநர் கவுதம் ராஜ் இணைந்து எழுதியுள்ள கதையை புதுமுக இயக்குநர் யாசின், ‘வீரப்பனின் கஜானா’ என்ற பெயரில் படமாக்குகிறார். இப்படம் குறித்து படக்குழுவினர் கூறியதாவது:

காட்டின் பெருமையை ஃபேன்டஸி, நகைச்சுவை, த்ரில்லர் கலந்து பொழுதுபோக்குக்கு பஞ்சம் வைக்காமல் பேசும் திரைப்படம்தான் ‘வீரப்பனின் கஜானா’.

தமிழகத்தில் காடு என்றதும் ஞாபகம் வருவது சத்தியமங்கலமும், வீரப்பனும்தான். எனவே, அதை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாகிறது. வீரப்பன் தொடர்பான காட்சிகள் முக்கியமானதாக இருக்கும். ஃபோர் ஸ்கொயர்ஸ் ஸ்டுடியோஸ் பிரபாதீஸ் ஷாம்ஸ் தயாரிக்கிறார். யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், ராஜேஷ், தேவா, பூஜா, ஜீவிதா என யூத் காம்போவுடன் உருவாகிறது. குரங்கு, புலி, யானை என படம் முழுக்க சுவாரசியங்கள் நிறைந்திருக்கும் என்பதால் குழந்தைகள் முதல் அனைவரும் குதூகலித்து பார்ப்பார்கள். தென்காசி, குற்றாலம், நாகர்கோவில் உள்ளிட்ட காட்டுப் பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்து வரும்படப்பிடிப்பு விரைவில் முடிவடையஉள்ளது. இப்படத்தை திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in