Published : 16 Apr 2021 15:53 pm

Updated : 16 Apr 2021 20:03 pm

 

Published : 16 Apr 2021 03:53 PM
Last Updated : 16 Apr 2021 08:03 PM

விவேக் பூரண குணமடைய பிரபலங்கள் வாழ்த்து

celebrities-wished-vivek

சென்னை

மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விவேக் பூரண குணமடைய பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழ்த் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விவேக். தனது நகைச்சுவையில் சமூக அக்கறை கருத்துகளைக் கலந்து மக்களிடையே கொண்டு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.


அப்துல் கலாம் மீது தீவிர பற்று கொண்டவர். மரம் நடுவதிலும் ஆர்வம் கொண்டவர்.

இன்று (ஏப்ரல் 16) காலை வீட்டில் குடும்பத்தினர் மத்தியில் பேசிக் கொண்டிருக்கும்போது மயங்கி விழுந்துவிட்டார். இதனைத் தொடர்ந்து உடனடியாக அவர் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இதய நோய் சிகிச்சை நிபுணர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பை சரிசெய்ய ஆஞ்சியோ சிகிச்சைக்கு முயன்றார்கள். மேலும், இதயச் செயல்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் அவருக்கு எக்மோ சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்னும் மருத்துவமனை தரப்பிலிருந்து முறையான அறிக்கை வெளியாகவில்லை.

இதனிடையே, விவேக்குடன் பணிபுரிந்த நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் அவர் பூரண குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளனர். சில முன்னணி நடிகர்கள் உடனடியாக அவருடைய குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளனர்.

விவேக் பூரண நலம்பெறப் பிரபலங்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துகளின் தொகுப்பு:

— Arya (@arya_offl) April 16, 2021

— Think Music (@thinkmusicindia) April 16, 2021

— Kameela (@nasser_kameela) April 16, 2021

— ArunVijay (@arunvijayno1) April 16, 2021

தவறவிடாதீர்!

VivekVivek hospitalizedVivek in icuVivek health criticalOne minute newsCelebrities wishes vivek for speedy recoveryCelebrity wished vivekவிவேக்விவேக் மருத்துவமனையில் அனுமதிவிவேக்கிற்கு மாரடைப்புதீவிர சிகிச்சைப் பிரிவில் விவேக்பிரபலங்கள் வாழ்த்து

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x