

தான் தயாரித்துள்ள ‘99 சாங்ஸ்’ திரைப்படத்துக்கு ஆதரவு தருமாறு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேற்று (ஏப்.15) ஏ.ஆர்.ரஹ்மான் தயாரித்து எழுதியுள்ள ‘99 சாங்ஸ்' படத்தின் ப்ரீமியர் காட்சி நடைபெற்றது. அதில் இயக்குநர் கெளதம் மேனன், தயாரிப்பாளர் தாணு, சிலம்பரசன், விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி, கீர்த்தி சுரேஷ், ஆண்ட்ரியா, சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.
இதில் ஏ.ஆர்.ரஹ்மான் பேசியவதாவது:
''இவ்வளவு நாள் என் பாடல்களுக்கு ஆதரவு கொடுத்திருக்கிறீர்கள். என் இசைக்கு ஆதரவு கொடுத்திருக்கிறீர்கள். இப்போது நான் கதை எழுதி ஒரு படத்தைத் தயாரித்திருக்கிறேன். ஒரு அற்புதமான குழுவுடன் இப்படம் தயாராகியுள்ளது. அனைவருக்கும் நன்றி. இப்படத்துக்கு நீங்கள் ஆதரவு தருவீர்கள் என்று நான் நம்புகிறேன்.
இதுபோன்ற ஒரு கடினமான தருணத்தில் உங்களை மகிழ்விக்கவும், உற்சாகப்படுத்தவும் இப்படம் ஒரு கலங்கரை விளக்கமாக இருக்கும் என்று நினைக்கிறேன்''.
இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் பேசினார்.