ஜுவாலா கட்டாவைக் கரம் பிடிக்கும் விஷ்ணு விஷால்: திருமணத் தேதி அறிவிப்பு

ஜுவாலா கட்டாவைக் கரம் பிடிக்கும் விஷ்ணு விஷால்: திருமணத் தேதி அறிவிப்பு
Updated on
1 min read

விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா இருவருக்கும் ஏப்ரல் 22-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.

விஷ்ணு விஷாலுக்கும் அவரது முன்னாள் மனைவி ரஜினிக்கும் 2018ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து ஆனது. இதனைத் தொடர்ந்து பாட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் இருக்கும் புகைப்படத்தை அடிக்கடி தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வந்தார் விஷ்ணு விஷால். இருவரும் காதலித்து வருவதை நண்பர்கள் உறுதிப்படுத்தினார்கள்.

2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் இருவருமே தங்கள் காதலை உறுதி செய்தார்கள். இதனைத் தொடர்ந்து சினிமா தொடர்பான விழாக்களில் இருவரையும் ஒன்றாகக் காணமுடிந்தது.

இந்நிலையில் விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளனர். இது தொடர்பாக ஒரு அறிவிப்பையும் விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா ஜோடி வெளியிட்டுள்ளது.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:

''எங்கள் குடும்பங்களின் ஆசிர்வாதத்துடன் எங்கள் திருமணம் குறித்த செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். நாங்கள் ஏப்ரல் 22-ம் தேதி திருமணம் செய்துகொள்ள இருக்கிறோம். இத்தனை ஆண்டுகாலம் நீங்கள் எங்கள் மீது பொழிந்த அன்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இந்தப் பயணத்தை தொடங்குவதற்கு உங்களுடைய ஆசீர்வாதங்களை வேண்டுகிறோம்''.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in