

நாகார்ஜூன், ஜீவா, ஹன்சிகா, தமன்னா, காஜல் உள்ளிட்ட பலர் 'இஞ்சி இடுப்பழகி' படத்தில் கவுரவ வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.
ஆர்யா, அனுஷ்கா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் 'இஞ்சி இடுப்பழகி'. பிரகாஷ் கோவலமுடி இயக்கி இருக்கும் இப்படத்துக்கு கீரவாணி இசையமைத்திருக்கிறார். பி.வி.பி. சினிமாஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இப்படம் நவம்பர் 27ம் தேதி வெளியாக இருக்கிறது.
இப்படத்துக்காக அனுஷ்கா உடல் எடையைக் கூட்டி நடித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புக்கு பின்னர் 'பாகுபலி 2' படத்துக்காக மீண்டும் பழைய உடல் நிலைக்கு திரும்பி இருக்கிறார்.
'இஞ்சி இடுப்பழகி' படத்தின் கதைக்கு ஏற்ப பல்வேறு திரையுலகினர் கவுரவ வேடத்தில் நடித்திருக்கிறார்கள். நாகார்ஜூன், ஜீவா, பாபி சிம்ஹா, ராணா, ஹன்சிகா, தமன்னா, ஸ்ரீதிவ்யா, ரேவதி, காஜல் அகர்வால், உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.
உடல் அமைப்பிலோ, தோற்றப் பொலிவிலோ இருப்பது அழகு அல்ல. நல்ல எண்ணம் தான் உண்மையான அழகு. என்பது தான் இப்படத்தின் மையக் கருவாகும். அழகாக இருப்பதற்கு இயற்கையான முறைகளே போதும், செயற்கையான முறைகள் வேண்டாம் என்று இப்படத்தின் மூலமாக வலியுறுத்தி இருக்கிறார்கள்.