

சண்முக பாண்டியனின் அடுத்த படத்துக்காக தீவிரமாக கதை கேட்டு வருகிறார்கள் விஜயகாந்த் குடும்பத்தினர்.
விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நாயகனாக நடித்து வெளியான படம் 'சகாப்தம்'. சுரேந்தன் இயக்கத்தில் வெளியான இப்படத்தை கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்தது. ஏப்ரல் 2ம் தேதி வெளியான இப்படம் மிக மோசமான விமர்சனங்களைப் பெற்றது.
அப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் தற்போது நாயகனாக நடிக்க இருக்கிறார் சண்முக பாண்டியன். இதற்காக மிக தீவிரமாக கதைக் கேட்டு வருகிறார்கள் கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனத்தினர்.
தயாரிப்பு நிறுவனத்தில் இருப்பவர்கள் கதையைக் கேட்டு இறுதி செய்தவுடன், விஜயகாந்த் அக்கதையைக் கேட்க முடிவு செய்திருக்கிறார்.
இந்தாண்டு இறுதிக்குள் கதை இறுதிசெய்யப்பட்டு, அடுத்த ஆண்டு துவக்கத்தில் படப்பிடிப்பைத் துவங்கத் திட்டமிட்டு இருக்கிறார்கள்.