தயாரிப்பாளர் சசிகாந்துக்கு கரோனா தொற்று உறுதி

தயாரிப்பாளர் சசிகாந்துக்கு கரோனா தொற்று உறுதி
Updated on
1 min read

முன்னணித் தயாரிப்பாளரான சசிகாந்துக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்த் திரையுலகில் 'ஒய் நாட் ஸ்டுடியோஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருபவர் சசிகாந்த். இந்த நிறுவனம் 'தமிழ்ப் படம்', 'காவியத் தலைவன்', 'இறுதிச் சுற்று', 'விக்ரம் வேதா', 'தமிழ்ப் படம் 2', 'கேம் ஓவர்' உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்துள்ளது.

தற்போது தனுஷ் நடித்துள்ள 'ஜகமே தந்திரம்' படத்தைத் தயாரித்துள்ளது. விரைவில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகவுள்ளது. இதைத் தவிர 'விக்ரம் வேதா' படத்தின் இந்தி ரீமேக்கையும், முன்னணி ஸ்டுடியோக்களுடன் இணைந்து தயாரிக்கவுள்ளது.

ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான சசிகாந்துக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இது தொடர்பாக சசிகாந்த் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"நேற்று மாலை எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நான் வீட்டில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தனிமையில் இருக்கிறேன். கடந்த சில நாட்களாக என்னோடு தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தங்கள் உடல்நலனைக் கவனத்தில் கொண்டு தேவைப்பட்டால் தங்களைப் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்".

இவ்வாறு தயாரிப்பாளர் சசிகாந்த் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in