

'கயல்' சந்திரனுடன் தொகுப்பாளினி அஞ்சனாவின் திருமணம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற இருக்கிறது.
பிரபுசாலமன் இயக்கத்தில் 'கயல்' படத்தில் நாயகனாக அறிமுகமானவர் சந்திரன். பிவிபி சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வரும் 'கிரகணம்' மற்றும் பிரபுசாலமன் தயாரித்து வரும் 'பைசல்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் சந்திரன்.
அவருக்கும், நீண்ட நாட்கள் அவரின் தோழியாக இருந்த தொகுப்பாளினி அஞ்சனாவுக்கும் இம்மாதம் 29ம் தேதி நிச்சயதார்த்தமும், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் திருமணமும் நடைபெற இருக்கிறது.
அஞ்சனாவை ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் சந்தித்திருக்கிறார் சந்திரன். அவ்விழாவில் ஏற்பட்ட பழக்கம் மூலமாக இருவரும் நண்பர்களானார்கள். நண்பர்களாக இருந்தவர்கள், காதலர்களாக மாறினார்கள். இருவீட்டிலும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்க, இத்திருமணம் நடைபெறவிருக்கிறது.