

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்தின் தலைப்பு 'காக்கி' அல்லது 'வெற்றி' என்று முடிவு செய்திருக்கிறது படக்குழு
விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன், இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துவரும் படத்தை இயக்கி வருகிறார் அட்லீ. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வரும் இப்படத்துக்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துவருகிறார். தாணு தயாரித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. விரைவில் கோவாவில் படப்பிடிப்பு நடத்த படக்குழு செல்லவிருக்கிறது.
இப்படத்தின் தலைப்பாக முதலில் 'காக்கி' என்ற பெயர் பரிசீலிக்கப்பட்டது. ஆனால், 'வாய்மை' இயக்குநர் செந்தில்குமார் இத்தலைப்பை பதிவு செய்து வைத்திருக்கிறார். இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மேலும், 'வெற்றி' என்ற பெயரும் பரிசீலனையில் இருக்கிறது.
'காக்கி' தலைப்புக்கான பேச்சுவார்த்தை சுமூகமாக முடியவில்லை என்றால், 'வெற்றி' தான் தலைப்பு என்று முடிவு செய்திருக்கிறார்கள். தலைப்பை இறுதி செய்து தீபாவளி அன்று பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.