

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பைரவி’ திகில் தொடர் வரும் ஜனவரியில் 5-ம் ஆண்டில் தடம் பதிக்கிறது. இந்த தொடரின் இயக்குநர் எஸ். செல்வகுமாருடன் ஒரு நேர்காணல்.
பொதுவாக திகில் தொடர்கள் பயம் கிளப்பும் தொடர்களாக இருக்கும். இந்த தொடர் ஆன்மீகம், குழந்தை கள் மற்றும் பெரியவர்களை முன்னிலைப் படுத்துகிறதே?
ஆவிகள் என்றாலே பயமுறுத் தும் விஷயம் என்று நம்மைப் பழக்கிவிட்டார்கள். பல திகில் தொடர்களும் அதையே முதன்மைப் படுத்துகிறது. நாங்கள் அதிலிருந்து மாறுபட்டு ஆவிகள் நமக்கு நெருக்கமானவை, அவைகளுக்கு நாம் பயப்பட தேவையில்லை என்பதை பதிவு செய்ய விரும்புகிறோம். குழந்தை கள் குறும்பு செய்தால் ‘பேய்க்கிட்ட பிடிச்சுக் கொடுத்துடுவேன்’ என்று பயமுறுத்துகிறோம். ஆனால் பேய் களை பயமுறுத்தும் விஷயமாக பார்க்கக்கூடாது என்பதற்காகத்தான் இந்த தொடரின் அதிகமான பகுதிகளை குழந்தைகள் நகர்த்திச் செல்லும் வகையில் அமைத்திருக்கிறோம். ஆன் மீகம் என்பது நம்மை நல்வழிப்படுத்தும் செயல். அதையும் இந்தத் தொடரின் மையமாக வைத்துக்கொண்டு கதையை நகர்த்தி வருகிறோம்.
தொடர்ந்து ஆன்மீகம், திகில் தொடர் களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறீர்களே?
வேலூர் அருகில் உள்ள தாதனவலசைதான் என் கிராமம். சினிமா இயக்க வேண்டும் என்று சென்னை வந்த நான், ஜி.எம்.குமார், ராஜ்கபூர், வேலுபிரபாகரன் ஆகி யோர்களிடம் உதவி இயக்குநராக பாடம் பயின்றேன். கமர்ஷியல் படங்களில் வேலை பார்த்ததைபோல ஆன்மீகம், ஆவியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்களிலும் பணிபுரிந்திருக்கிறேன். என் முதல் தொடர் ‘பிறவி’. இத்தொடரை ஜெ.ஜெ. டிவிக்காக இயக்கினேன். தொலைக் காட்சியில் பல ரியாலிடி நிகழ்ச்சி களையும் இயக்கியிருக்கிறேன். அந்த அனுபவத்தை வைத்து ‘ராஜராஜேஸ்வரி’ என்ற ஆன்மீக சீரியலை இயக்கினேன். சரிகம நிறுவனத்தின் தென்னிந்திய பகுதியின் துணைத் தலைவர் பி.ஆர்.விஜயலட்சுமிதான் அதை அமைத் துக்கொடுத்தார். அவர் பி.ஆர்.பந்துலு வின் மகள். ஆசியாவின் முதல் பெண் கேமரா கலைஞர்.
அந்ததொடரை இயக்கத் தொடங் கியதும் எனக்கு நல்ல அடையாளம் கிடைக்கத்தொடங்கியது. நான் முதலில் இயக்கிய ஆன்மீக தொடர் நல்ல வரவேற்பை பெற்றதால் அந்த நிறுவனத்தினர் என்னை அதுபோன்ற தொடர்களை இயக்க வைக்கிறார்கள். நானும் மகிழ்ச்சியோடு அதை தொடர்கிறேன்.
‘பைரவி’ தொடரின் நாயகி அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கிறாரே? இது பார்வையாளர்களை சலிப்படைய வைக்குமே?
இந்த தொடரில் ‘சுந்தரா டிராவல்ஸ்’ நாயகி ராதா முதலில் நடித்து வந்தார். அவரால் தொடர்ந்து நடிக்க முடியவில்லை. அதனால் அவரை மாற்றி சுனிதாவை நடிக்கவைத்தோம். அவர் நன்றாக நடித்தார். ஆனால் குழந்தை பிறந்த பிறகு அவரால் நடிக்க முடிய வில்லை. அடுத்து அம்மன் வேடத்தில் ஐஸ்வர்யாவை நடிக்க வைத்தோம். அவரும் திடீரென்று வெளிநாடு செல்ல வேண்டி வந்தது. இப்போது நித்யாதாஸ் நடித்து வருகிறார்.
அதேபோல முக்கியமான கதா பாத்திரத்தில் கே.ஆர்.விஜயா நடித்து வருகிறார். அவர் ஏற்கெனவே நான் இயக்கிய ‘ராஜராஜேஸ்வரி’ தொட ரில் நடித்தவர். மெகா தொடர்களில் இது போன்று நடிகர், நடிகைகள் மாறுவது அடிக்கடி நடக்கக் கூடியதுதான். கதையும், கதாபாத்திரமும் சிறப்பாக இருந்தால் நடிகர், நடிகை மாறினா லும் பெரிதாக தெரியாது. கதையின் போக்கும், எதிர்பார்ப் பும் குறையும் போதுதான் ‘அட அவங்க நடிச்சா நல்லா இருந்திருக்குமே’ என்ற எண்ணம் வரும். அப்படி ஒரு எண்ணத்தை நாங்கள் ஏற்படுத்த விடுவதில்லை.
இந்த தொடரைப்போலவே திகில் பின் னணியில் படம் இயக்கப்போகிறீர்களாமே?
என் அடுத்த இலக்கு திரைப்படங்கள் தான். அதற்காக கமர்ஷியல் கதைகள் எல்லாம் தயாராக இருக்கிறது. ஆனால், தயாரிப்பு தரப்பில் ‘பைரவி’ மாதிரி படம் கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
சமீபத்தில் வந்த ‘மாஸ்’ படம்கூட எங்கள் தொடரை அடிப்படையாக கொண்டது என்று பார்த்தவர்கள் சொன்னார்கள். ஆவிகளை மையமாக வைத்து ஒரு தொடர் இயக்கி வருகிறேன். மீண்டும் இதை கையில் எடுக்கும்போது மாறுபட்டு வித்தியாசமானதாக கொடுக்க வேண்டும். அந்த வேலைகள்தான் இப்போது நடந்து வருகிறது.