குணச்சித்திர நடிகர் வெங்கடேஷ் காலமானார்

குணச்சித்திர நடிகர் வெங்கடேஷ் காலமானார்
Updated on
1 min read

குணச்சித்திர நடிகர் வெங்கடேஷ் இன்று மதியம் மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 55.

வெங்கடேஷ் என்று அழைப்பட்டு வந்த வெங்கடேஸ்வரன் சிறந்த குணச்சித்திர நடிகர் என்ற பாராட்டைப் பெற்றவர். தமிழில் ‘மைனா’, ‘பீட்சா’, ‘பேட்ட’ உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர்.

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’, ‘ஈரமான ரோஜாவே’ ஆகிய தொடர்களில் நடித்து வந்தார்.

விருதுநகரைப் பூர்வீகமாகக்கொண்ட நடிகர் வெங்கடேஷ் நடிப்புத்துறையை தேர்வு செய்ததால் சென்னைக்கு இடம்பெயர்ந்தார். காவல்துறை, குணச்சித்திர நடிகர் மற்றும் வில்லனாக பல படங்களில் நடித்து வந்தவர். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் உள்ளனர்.

இவருக்கு பாமா என்ற மனைவியும், நிவேதா என்ற மகள், தேவ் ஆனந்த் என்ற மகன் உள்ளனர்.

சென்னை, சாலிக்கிராமத்தில் வசித்து வந்த வெங்கடேஷின் இறுதிச் சடங்குகள் நாளை மதியம் வடபழனி ஏவி.எம் பின்புறம் உள்ள மயானத்தில் நடக்க உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in