

'பசங்க 2' படத்தின் இறுதி 20 நிமிட காட்சிகள் கண்டிப்பாக பார்ப்பவர்களின் நெஞ்சை கலங்கடித்துவிடும் என்று சூர்யா தெரிவித்திருக்கிறார்.
சூர்யா, அமலாபால், பிந்துமாதவி மற்றும் பல சிறு குழந்தைகள் நடிக்க, பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'பசங்க-2'. சூர்யாவின் 2டி நிறுவனம் வழங்க, இயக்குநர் பாண்டிராஜ் முதல் பிரதி அடிப்படையில் தயாரித்திருக்கிறார்.
ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் ஆகியோர் இணைந்து இப்படத்தை வெளியிடுகிறார்கள். டிசம்பர் முதல் வாரத்தில் இப்படத்தை வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறன.
இந்நிலையில், அனைத்து பணிகளும் முடிந்து இப்படத்தைப் பார்த்த சூர்யா, பாண்டிராஜ் மற்றும் படக்குழுவினர் அனைவரையும் வெகுவாக பாராட்டி இருக்கிறார். மேலும், இப்படத்தின் கடைசி 20 நிமிடக் காட்சிகள் கண்டிப்பாக பார்ப்பவர்களின் நெஞ்சை கலங்கடித்துவிடும் என்றும் தெரிவித்திருக்கிறார் சூர்யா. சூர்யாவின் இந்த பாராட்டால் மகிழ்ச்சியில் இருக்கிறது படக்குழு.