விருகம்பாக்கம் தொகுதியில் நடிகர் மயில்சாமி சுயேச்சையாகப் போட்டி

விருகம்பாக்கம் தொகுதியில் நடிகர் மயில்சாமி சுயேச்சையாகப் போட்டி
Updated on
1 min read

விருகம்பாக்கம் தொகுதியில் நடிகர் மயில்சாமி சுயேச்சையாகப் போட்டியிட மனுத்தாக்கல் செய்துள்ளார்.

பல்வேறு படங்களில் குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் மயில்சாமி. இவர் தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர். அரசியல் நிகழ்வுகள் குறித்து தொடர்ச்சியாகக் கருத்து தெரிவித்து வருபவர். மேலும், பல்வேறு தொலைக்காட்சி விவாதங்களிலும் கலந்துகொண்டு பேசியுள்ளார்.

கரோனா ஊரடங்கு சமயத்தில் அவர் குடியிருக்கும் விருகம்பாக்கம் பகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்துள்ளார். தற்போது தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், மயில்சாமியும் தேர்தல் களம் காணவுள்ளார்.

எந்தக் கட்சியிலும் சேராமல் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேச்சையாகக் களம் காணுகிறார் நடிகர் மயில்சாமி. இன்று (மார்ச் 15) மனுத்தாக்கல் செய்துள்ளார். விருகம்பாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளராக ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா, அதிமுக வேட்பாளராக ஏ.சூ.ரவி, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பாடலாசிரியர் சிநேகன் உள்ளிட்டோரை எதிர்த்துக் களத்தில் நிற்கவுள்ளார் மயில்சாமி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in