

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், நவம்பர் 26ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு.
அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன், இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வரும் இப்படத்தை தாணு தயாரித்து வருகிறார்.
சென்னையில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கோவாவில் நடைபெற்று வருகிறது. அங்கு விஜய் - ஏமி ஜாக்சன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க இருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து ஒரு பிரம்மாண்டமான பஸ் சண்டைக் காட்சியையும் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.
இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. 'காக்கி' அல்லது 'வெற்றி' இரண்டில் ஏதாவது ஒன்று தான் தலைப்பாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனால், படக்குழு இதனை உறுதிசெய்யவில்லை. தீபாவளி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாவதாக இருந்தது. ஆனால், படத்தலைப்பு இறுதியாகததால் வெளியிடவில்லை.
இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் நவம்பர் 26ம் தேதி வெளியிடப்படும் என்று இயக்குநர் அட்லீ தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். இப்படம் அடுத்தாண்டு ஏப்ரலில் வெளியிட தயாரிப்பாளர் தாணு திட்டமிட்டு இருக்கிறார்.