

'நைட் ஷோ' படத்தின் பெயரை 'ஒருநாள் இரவில்' என பெயர் மாற்றி இருக்கிறார்கள். நவம்பர் 20ம் தேதி படம் வெளியாக இருக்கிறது.
தமிழ்த் திரையுலகின் தற்போதைய முன்னணி எடிட்டர்களில் முக்கியமானவர் ஆண்டனி. மலையாளத்தில் ஜோ மேத்திவ் இயக்கத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற 'ஷட்டர்' என்ற படத்தின் தமிழ் ரீமேக் மூலம் இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார் ஆண்டனி.
சத்யராஜ், அனுமோல், கல்யாணி நடராஜன், தீட்சிதா கோத்தாரி உள்ளிட்ட பலர் நடிக்க 'நைட் ஷோ' என்ற பெயரில் ரீமேக் செய்தார்கள். இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் முடிந்துவிட்டன. விரைவில் சென்சார் செய்யப்பட இருக்கிறது.
இந்நிலையில், தற்போது 'நைட் ஷோ' என்ற பெயரை 'ஒருநாள் இரவில்' என்று பெயர் மாற்றி இருக்கிறார்கள். இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் நவம்பர் 20ம் தேதி வெளியிட இருக்கிறது.