விரைவில் விஜய் படத்துக்கு இசை: தமன் தகவல்

விரைவில் விஜய் படத்துக்கு இசை: தமன் தகவல்
Updated on
1 min read

விரைவில் விஜய் படத்துக்கு இசையமைக்க உள்ளதாக இசையமைப்பாளர் தமன் தெரிவித்துள்ளார்.

'மாஸ்டர்' படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார் விஜய். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. இதற்கு இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். பின்பு, இயக்குநர் பொறுப்பிலிருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகிவிட்டார்.

தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் படத்தை 'கோலமாவு கோகிலா' இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டது. நெல்சன் படங்கள் என்றாலே அனிருத்தான் இசையமைப்பாளர். விஜய் படத்துக்கும் அனிருத் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். இதனால், விஜய் படத்துக்கு இசையமைக்க வேண்டும் என்ற தமனின் கனவு நிறைவேறவில்லை.

இந்நிலையில், #AskThaman என்ற ஹேஷ்டேகில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார் தமன். அப்போது, "விஜய்யுடன் உங்கள் கூட்டணியை விரைவில் எதிர்பார்க்கலாமா" என்ற கேள்விக்கு "ஆம்" எனப் பதிலளித்துள்ளார் தமன்.

மேலும், சூர்யா குறித்து, "எனக்கு சூர்யாவை மிகவும் பிடிக்கும். பல்துறை திறமையாளர். அன்பான மனிதர். அவரது அகரம் அறக்கட்டளையின் பெரிய ரசிகன் நான்" என்று தமன் குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in