'தி கிரேட் இந்தியன் கிச்சன்' ரீமேக்: படப்பூஜையுடன் பணிகள் தொடக்கம்

'தி கிரேட் இந்தியன் கிச்சன்' ரீமேக்: படப்பூஜையுடன் பணிகள் தொடக்கம்
Updated on
1 min read

'தி கிரேட் இந்தியன் கிச்சன்' படத்தின் தென்னிந்திய மொழிகளின் ரீமேக் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.

ஜியோ பேபி இயக்கத்தில் நிமிஷா சஜயன், சுராஜ் வெஞ்சரமூட் நடித்திருந்த படம் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்'. புதிதாகத் திருமணமான பெண் ஒருவர், பழமைவாதக் கொள்கைகளும் ஆணாதிக்கமும் நிறைந்த கணவரின் குடும்பத்தில் படும் கஷ்டங்கள், தொடர்ந்து அவர் எடுக்கும் முடிவு என்ன என்பதைச் சொல்லியிருந்த படம் இது.

ஜனவரி 15-ம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான இந்தத் திரைப்படம் விமர்சகர்களிடமும், ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆணாதிக்கச் சிந்தனையால் பாதிக்கப்படும் ஒரு படித்த பெண்ணின் நிலையை அழுத்தமாக, யதார்த்தமாகக் காட்டியிருந்ததாகப் பாராட்டுகளைப் பெற்றது.

இந்தப் படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக் பணிகள் இன்று (மார்ச் 3) படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. ஆர்.கண்ணன் இயக்கி, தயாரிக்கவுள்ளார். இதில் நிமிஷா சஜயன் கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். விரைவில் படப்பிடிப்பு தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது.

ஒளிப்பதிவாளராக பாலசுப்பிரமணியெம், வசனகர்த்தவாக சவரிமுத்து மற்றும் ஜீவிதா சுரேஷ்குமார், எடிட்டராக லியோ ஜான் பால், கலை இயக்குநராக ராஜ்குமார் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in