'தளபதி 65' வாய்ப்பு கிடைக்கிறதா எனப் பார்ப்போம்: பூஜா ஹெக்டே

'தளபதி 65' வாய்ப்பு கிடைக்கிறதா எனப் பார்ப்போம்: பூஜா ஹெக்டே
Updated on
1 min read

'தளபதி 65' வாய்ப்பு கிடைக்கிறதா எனப் பார்ப்போம் என்று பூஜா ஹெக்டே அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

'மாஸ்டர்' படத்தைத் தொடர்ந்து, நெல்சன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார் விஜய். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தில் விஜய்யுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. அனிருத் இசையமைக்கவுள்ள இந்தப் படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவாளராக பணிபுரியவுள்ளார்.

இந்தப் படத்தில் விஜய்க்கு நாயகியாக பூஜா ஹெக்டே அல்லது ராஷ்மிகா மந்தனா நடிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இருவரிடமுமே படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். 'தளபதி 65' என அழைக்கப்பட்டு வரும் இந்தப் பட வாய்ப்பு குறித்து பூஜா ஹெக்டே கூறியிருப்பதாவது:

”அந்தப் படத்தில் நடிக்க எனக்கொரு வாய்ப்புக் கிடைத்தால் நன்றாக இருக்கும். எனது முதல் படம் தமிழில் அமைந்ததால், எனக்கு எப்போதுமே தமிழ்ப்படங்களின் மீது ஆர்வம் அதிகம்.

எனவே, இந்த அழகான படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைக்கிறதா எனப் பார்ப்போம். அது நடக்கும் என நான் நம்புகிறேன். தமிழ்ப் படத்தில் விஜய்யுடன் நடிக்க விரும்புகிறேன். எனக்கு அது விதித்திருந்தால் நிச்சயம் நடக்கும்"

இவ்வாறு பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in