இயக்குநர் தேசிங் பெரியசாமியைக் கரம் பிடித்த அகத்தியனின் மகள்: பிரபலங்கள் வாழ்த்து

இயக்குநர் தேசிங் பெரியசாமியைக் கரம் பிடித்த அகத்தியனின் மகள்: பிரபலங்கள் வாழ்த்து
Updated on
1 min read

இயக்குநர் தேசிங் பெரியசாமி - நடிகை நிரஞ்சனி ஆகிய இருவருக்கும் இன்று திருமணம் நடைபெற்றது.

'வான்மதி', 'காதல் கோட்டை', 'கோகுலத்தில் சீதை', 'விடுகதை' உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியவர் அகத்தியன். இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இவரது முதல் முகள் பெயர் கனி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். இவர் ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’, ‘சமர்’, ‘நான் சிகப்பு மனிதன்’ உள்ளிட்ட படங்களின் இயக்குநர் திருவின் மனைவி.

அகத்தியனின் இரண்டாவது மகள் விஜயலட்சுமி. ‘சென்னை -28’ படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதன் பிறகு பல்வேறு திரைப்படங்களில் நடித்தார். ‘பண்டிகை’ படத்தை இயக்கிய ஃபெரோஸ் என்பவரைத் திருமணம் செய்துள்ளார்.

அகத்தியனின் மூன்றாவது மகளான நிரஞ்சனி அகத்தியன் கடந்த ஆண்டு துல்கர் சல்மான் இயக்கத்தில் வெளியான ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் படப்பிடிப்பு சமயத்தில் அப்படத்தை இயக்கிய தேசிங் பெரியசாமிக்கும் நிரஞ்சனிக்கும் இடையே காதல் மலர்ந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இவர்களின் காதலுக்கு இரு வீட்டிலும் பச்சைக் கொடி காட்டிவிட்டதால் நிரஞ்சனி - தேசிங் பெரியசாமி இருவருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. இதில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in