

கோவிட் உணர்த்திய வாழ்க்கைப் பாடம் குறித்து ஹிப் ஹாப் ஆதி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வரும் 'சிவகுமாரின் சபதம்' மற்றும் 'அன்பறிவு' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ஹிப் ஹாப் ஆதி.
இதில் 'சிவகுமாரின் சபதம்' படத்தில் நாயகனாக நடித்திருப்பது மட்டுமன்றி, இயக்கியும் உள்ளார். 'அன்பறிவு' படத்தை அஸ்வின் ராம் இயக்கி வருகிறார்.
பிப்ரவரி 20-ம் தேதி தனது பிறந்த நாளைக் கொண்டாடினார் ஹிப் ஹாப் ஆதி. அவருக்கு திரையுலகினர், படக்குழுவினர் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்தார்கள். இந்த வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஹிப் ஹாப் ஆதி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"இந்த வாழ்க்கை கொஞ்ச காலம் தான் என நன்கு உணர்த்தியது கோவிட். இருக்கும் வரை பிடித்ததை, பிடித்தவர்களுடன், பிடித்தவர்களுக்காகச் செய்வது ஒரு பாக்கியம் தான். நான் படப்பிடிப்பு தளத்தில் என்னை நேசிக்கும் மக்களுடன் என்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடினேன். என்னை நிபந்தனையின்றி நேசிக்கும் மக்களுடன் தொடர்ந்து நான் பணிபுரிய விரும்புகிறேன். உங்கள் அனைவரையும் நான் நேசிக்கிறேன். உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி"
இவ்வாறு ஹிப் ஹாப் ஆதி தெரிவித்துள்ளார்.