

'மருது' படத்தில் விஷாலுடன் ராதாரவி, ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பலர் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். நவம்பரில் படப்பிடிப்பு துவங்குகிறது.
பாண்டிராஜ் இயக்கத்தில் 'கதகளி' படத்தில் நடித்துவருகிறார் விஷால். அதனைத் தொடர்ந்து 'குட்டிப்புலி' மற்றும் 'கொம்பன்' படங்களை இயக்கிய முத்தையா படத்துக்கு தேதிகள் ஒதுக்கி இருக்கிறார்.
கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கும் இப்படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. நவம்பர் இரண்டாம் வாரத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.
இப்படத்தின் நாயகியாக ஸ்ரீதிவ்யா ஒப்பந்தமாகி இருக்கிறார். மேலும், ராதாரவி, சூரி உள்ளிட்ட பலர் விஷாலுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் ராதாரவிக்கு எதிராக செயலாளர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றவர் விஷால். தேர்தலுக்குப் பிறகு இருவரும் இணைந்து நடிப்பது திரையுலகினர் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது.