நடிகர் வடிவேலு மீதான அவதூறு வழக்கை விசாரிக்க தடை

நடிகர் வடிவேலு மீதான அவதூறு வழக்கை விசாரிக்க தடை
Updated on
1 min read

நடிகர் வடிவேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:

நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்தேன். நான் நடித்த படத்தில் வரும் நகைச்சுவைக் காட்சியான, “கிணற்றைக் காணவில்லை” என்ற வசனத்தைப் போல நடிகர் சங்கத் தேர்தலில், நடிகர் சங்கக் கட்டிடத்தைக் காணவில்லை என்று பிரசாரம் செய்தேன்.

எனது பேச்சால் யாரும் பாதிக்கப் படவில்லை. விளம்பர நோக்கில், என்னைத் துன்புறுத்தும் நோக்கில் நாமக்கல் மாவட்ட நாடக நடிகர் சங்கத் தலைவர் ராஜேந்திரன் அங் குள்ள முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். எனக்கு எதிராக வழக்கு தொடர அவருக்கு தகுதி இல்லை. இது அவதூறு வழக்கு ஆகாது. ஆனால், இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றம் எனக்கு சம்மன் அனுப்பவும், நவம்பர் 26-ம் தேதி நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளது.

நான் எந்த அவதூறு குற்றமும் புரியவில்லை. எனவே, என் மீதான நாமக்கல் மாஜிஸ்திரேட் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். அவ்வழக்கை ரத்து செய்ய வேண்டும். நீதிமன்றத்தில் ஆஜ ராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்பையா இவ்வழக்கை விசாரித்தார். நடிகர் வடிவேலு சார்பில் வழக்கறிஞர் தண்டபாணி ஆஜரானார். இதையடுத்து நாமக்கல் மாஜிஸ்திரேட் நீதி மன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்ததுடன், வழக்கு விசாரணைக்கு தடை விதித்தும் உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in