கோயிலுக்குள் வந்தது போன்ற உணர்வு: இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவைப் பாராட்டிய ரஜினி

கோயிலுக்குள் வந்தது போன்ற உணர்வு: இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவைப் பாராட்டிய ரஜினி
Updated on
1 min read

இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவைப் பார்த்து ரசித்து, பாராட்டு தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.

சென்னை கோடம்பாக்கத்தில் 'இளையராஜா ஸ்டுடியோ' என்ற பெயரில் புதிய ஸ்டுடியோ ஒன்றை உருவாக்கியுள்ளார் இளையராஜா. சில தினங்களுக்கு முன்பு வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் படத்தின் இசைப்பணிகள் மூலமாக புதிய ஸ்டுடியோவில் தனது பணிகளைத் தொடங்கினார். அன்றைய தினம் பல்வேறு திரையுலக பிரபலங்கள் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.

இந்நிலையில் நேற்று (பிப்ரவரி 15) காலை இளையராஜாவின் தி.நகர் வீட்டுக்கு வந்த ரஜினிகாந்த், அவருடன் பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினார். பின்பு சொந்த ஸ்டுடியோ கட்டியிருப்பதைக் கேள்விப்பட்டு, அவருடனே ஸ்டுடியோவுக்குச் சென்று சுற்றிப் பார்த்துள்ளார். பின்பு கோயிலுக்குள் வந்தது போன்ற உணர்வு தனக்கு ஏற்பட்டதாக இளையராஜாவுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார் ரஜினி. ஸ்டுடியோவிலும் இளையராஜாவுடன் நீண்ட நேரம் உரையாடிவிட்டுச் சென்றுள்ளார்.

இன்று (பிப்ரவரி 16) மீண்டும் இளையராஜா ஸ்டுடியோவுக்கு வருகை தந்து ஆச்சரியம் அளித்துள்ளார் ரஜினி. அங்கு நடக்கும் இசைப் பணிகளை அமர்ந்து பார்த்துள்ளார். அதன் வீடியோக்கள், புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. சமீபமாகப் பொது நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாத ரஜினி, தற்போது இளையராஜாவின் ஸ்டுடியோவுக்கு விசிட் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in