பெட்ரோல், சமையல் எரிவாயு விலை உயர்வு: சி.வி.குமார் காட்டம்

பெட்ரோல், சமையல் எரிவாயு விலை உயர்வு: சி.வி.குமார் காட்டம்
Updated on
1 min read

பெட்ரோல், சமையல் எரிவாயு விலை உயர்வு தொடர்பாக தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் சி.வி.குமார் காட்டமாகக் கருத்து தெரிவித்துள்ளார்.

வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடையுள்ள மானியமில்லாத சமையல் கேஸ் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 1-ம் தேதி ரூ.25 உயர்த்தப்பட்ட நிலையில், 2-வது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் மட்டும் 75 ரூபாய் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், பெட்ரோல் - டீசல் விலையும் தொடர்ச்சியாக விலை உயர்ந்து வருகிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 91.19 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. அதிகபட்சமாக இந்தூரில் 97.35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை ஏற்றத்துக்குப் பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இது தொடர்பாக முன்னணித் தயாரிப்பாளர் சி.வி.குமார் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தொடக் கடினமாக உழைத்த அத்தனை பேருக்கும் வாழ்த்துகள். உங்கள் கடின உழைப்பின் மூலம் சமையல் எரிவாயு விலையை விரைவில் 1000 ரூபாய்க்கு எடுத்துச் செல்வீர்கள் என்று நம்புகிறேன்".

இவ்வாறு சி.வி.குமார் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in