

தேசிய விருது பெற்ற ஒளிப்பதி வாளரும், இயக்குநருமான அசோக் குமார், உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
‘நடிகன்’, ‘வெற்றிவிழா’, ‘ஜானி’, ‘உதிரிப்பூக்கள்’ உள்ளிட்ட பல தமிழ் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் அசோக் குமார் (72). அதோடு ‘அன்று பெய்த மழையில்’ (தமிழ்), ‘அபி நந்தனா’ (தெலுங்கு) உள்ளிட்ட சில படங்களையும் அவர் இயக்கியுள்ளார்.
நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ள அசோக் குமார், 1980-ம் ஆண்டில் வெளியான ‘நெஞ்சத்தை கிள்ளாதே’ படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளர் விருதைப் பெற்றவர்.
அசோக்குமாரின் உடல்நலம் குறித்து அவரது மகன் ஒளிப்பதிவாளர் ஆகாஷ் கூறுகையில், “கடந்த ஒரு மாத காலமாக அவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இரண்டு வாரங்களுக்கு முன்புவரை அவரது உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் இருந்து வந்தது. ஆனால் தற்போது அவர் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார்’’ என்றார்.