'வலிமை' மீதான அன்பு மகிழ்ச்சியளிக்கிறது: போனி கபூர்

'வலிமை' மீதான அன்பு மகிழ்ச்சியளிக்கிறது: போனி கபூர்
Updated on
1 min read

'வலிமை' படத்தின் மீது காட்டப்படும் அன்பு மகிழ்ச்சியளிக்கிறது என்று தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'வலிமை'. இந்தப் படத்தில் இந்தியாவில் படமாக்க வேண்டிய காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. ஒரே ஒரு சண்டைக்காட்சி மட்டும் வெளிநாட்டில் படமாக்கத் திட்டமிட்டு வருகிறது படக்குழு. இந்தப் படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார்.

ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியவற்றைத் தாண்டி இதுவரை படக்குழுவினர் எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் அவ்வப்போது "வலிமை அப்டேட்" என்று சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் செய்து வந்தார்கள்.

சமூக வலைதளத்தில் திரையுலக பிரபலங்களுக்குப் பதிலாகக் கூட "வலிமை அப்டேட்" என பதிவிட்டு வந்தார்கள். இதைத் தாண்டி பிரதமர் மோடி பயணித்த இடம், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலி உள்ளிட்டோரிடமும் "வலிமை அப்டேட்" என்று கேட்டு வந்தார்கள். இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தற்போது அனைத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகத் தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பதிவில் "வணக்கம். எங்கள் 'வலிமை' படத்தின் மீதான நீங்கள் காட்டும் அன்பு மகிழ்ச்சியளிக்கிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடுவதற்கான பணிகளை நாங்கள் மேற்கொண்டு வருவதால் பொறுத்துக் கொள்ளுங்கள். இது படத்தின் நலனுக்காகவே" என்று பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவால் அஜித் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.

வெளிநாட்டுப் படப்பிடிப்பு முடிவடைந்த உடன் தான், 'வலிமை' படத்தின் வெளியீடு குறித்துத் திட்டமிடவுள்ளது படக்குழு.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in