ஊழல் சம்பவப் பின்னணியில் ஒரு அரசியல் படம்

ஊழல் சம்பவப் பின்னணியில் ஒரு அரசியல் படம்
Updated on
1 min read

தமிழ்நாட்டில் நடந்த மிகப் பெரிய ஊழல் சம்பவப் பின்னணியில் ஒரு அரசியல் படத்தை ஆரூர் மாரிமுத்து இயக்க உள்ளார். இப்படத்தில், ‘திருட்டு ரயில்’, ‘கடலில் கட்டுமரம்’ ஆகிய படங்களில் நடித்த ரக்‌ஷன் நடிக்கிறார்.

இயக்குநர்கள் வெற்றிமாறன், செல்வராகவன், கே.எஸ்.ரவிகுமார், எஸ்.ஜே.சூர்யா என முன்னணி இயக்குநர்களிடம் உதவி, துணை மற்றும் இணை இயக்குநராகப் பல வெற்றிப் படங்களில் பணிபுரிந்தவர், இயக்குநர் ஆரூர் மாரிமுத்து.

தமிழ்நாட்டில் நடந்த ஒரு ஊழலை மையமாகக் கொண்டு இந்தக் கதையை ஆரூர் மாரிமுத்து உருவாக்கி இருக்கிறார். எது தொடர்பான ஊழல் என்பதை இயக்குநர் இப்போது சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார். விரைவில் அது தொடர்பான அறிவிப்பு வெளிவரும்.

இந்தப் படத்துக்காக நாயகன் ரக்‌ஷன் தனது தோற்றத்தை முற்றிலுமாக மாற்றி வித்தியாசமாக நடிக்க உள்ளார். மிகப் பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்தப் படத்துக்கு பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் பணியாற்ற உள்ளார். படத்தின் நாயகி, இசையமைப்பாளர் உள்ளிட்ட அறிவிப்பு அடுத்தடுத்து வெளியிடப்படும் எனப் படக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in