

'இஞ்சி இடுப்பழகி' படத்துக்கு சென்சார் அதிகாரிகள் 'யு' சான்றிதழ் வழங்கியிருப்பதால், மீண்டும் சர்ச்சையாகி இருக்கிறது.
ஆர்யா, அனுஷ்கா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் 'இஞ்சி இடுப்பழகி'. பிரகாஷ் கோவலமுடி இயக்கி இருக்கும் இப்படத்துக்கு கீராவாணி இசையமைத்திருக்கிறார். பி.வி.பி. சினிமாஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இப்படம் நவம்பர் 27ம் தேதி வெளியாகி இருக்கிறது.
இப்படத்தைப் பார்த்தவர்கள் பலரும், இப்படத்துக்கு எப்படி 'யு' சான்றிதழ் வழங்கினார்கள் சென்சார்கள் அதிகாரிகள் என கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.
அப்படத்தின் முதலில் வரும் 'சைஸ் ஜூரோ' பாடல் மற்றும் அதனைத் தொடர்ந்து படத்தில் வரும் முத்தக் காட்சிகள் என இருக்கும் போது 'யு/ஏ' சான்றிதழ் தான் அளித்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார்கள். மேலும், இப்படம் தெலுங்கில் 'யு/ஏ' சான்றிதழுடன் தான் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் ஜேம்ஸ்பாண்ட் படமான 'ஸ்பெக்டர்' வெளியாகும் போது அப்படத்தில் இருக்கும் முத்தக் காட்சிகளை சென்சார் அதிகாரிகள் குறைத்தப் போது பெரும் சர்ச்சை எழுந்தது.
ட்விட்டர் தளத்தில் பலரும் #SanskariJamesBond என்ற பெயரில் சென்சார் அதிகாரிகளை கிண்டல் செய்து பதிவுகளை வெளியிட்டு வந்தது நினைவுகூரத்தக்கது.