எனக்கு மிகவும் பிடித்தமான எதிரி ஆர்யா: விஷால்

எனக்கு மிகவும் பிடித்தமான எதிரி ஆர்யா: விஷால்
Updated on
1 min read

எனக்கு மிகவும் பிடித்தமான எதிரி ஆர்யா என்று விஷால் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் - ஆர்யா இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. 'எனிமி' எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ், மிருணாளினி, கருணாகரன், மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

சென்னையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து முக்கியமான சண்டைக் காட்சி ஒன்றைப் படமாக்கியது படக்குழு. இதில் விஷாலுக்கு வில்லனாக ஆர்யா நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. முதலில் விஷாலின் லுக்கை வெளியிட்டது படக்குழு. அதனைத் தொடர்ந்து இன்று (பிப்ரவரி 4) ஆர்யாவின் லுக்கை வெளியிட்டது.

ஆர்யாவின் லுக்கைப் பகிர்ந்து விஷால் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"எனக்கு மிகவும் பிடித்தமான எதிரி ஆர்யா. உங்களை எனக்கு இந்தப் படத்தில் பிடிக்காது என்று நினைக்கிறேன். ஆனால், நிஜ வாழ்க்கையில் என்றும்போல உங்களை நேசிக்கிறேன். உங்கள் அத்தனை சக்தியையும் கொண்டு என்னை எதிர்க்கத் தயாராக இருங்கள். குறிப்பாக இந்தப் படத்தில். இந்தப் படத்துக்காக நட்பை மனதில் வைத்து என்னால் யோசிக்க முடியாது. உங்களுக்கு என் சக்தி தெரியவரும்".

இவ்வாறு விஷால் தெரிவித்துள்ளார்.

விஷாலின் ட்வீட்டுக்குப் பதிலளிக்கும் வகையில் ஆர்யா தனது ட்விட்டர் பதிவில், "உங்களுக்குக் கிடைக்கக் கூடியதில் இனிமையான எதிரி நான்தான். கவலை வேண்டாம். இம்முறை நான் உங்களிடம் கனிவாக நடந்து கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in