இணையத்தில் வைரலான மீம்ஸ்: மாளவிகா மோகனன் ரசிப்பு

இணையத்தில் வைரலான மீம்ஸ்: மாளவிகா மோகனன் ரசிப்பு
Updated on
1 min read

இணையத்தில் வைரலாகும் மீம்ஸைத் தான் மிகவும் ரசித்ததாக மாளவிகா மோகன் தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் 'மாஸ்டர்'. இந்தப் படத்தில் நாயகியாக நடித்திருந்தார் மாளவிகா மோகனன். அவருடைய காட்சிகளை வைத்து தொடர்ச்சியாக ட்விட்டர் தளத்தில் மீம்ஸ் வெளியிடப்பட்டு வருகின்றன.

விஜய்யிடம் கோபப்பட்டு பேசும் காட்சிகளை வைத்து இந்த மீம்ஸ் உருவாக்கப்பட்டன. இது தொடர்பாக மாளவிகா மோகனன் தனது அதிருப்தியை வெளிப்படுத்துவார் எனப் பலரும் எதிர்நோக்கினார்கள். ஆனால், அவரோ அதை மிகவும் ரசித்ததாகத் தெரிவித்துள்ளார்.

இணையத்தில் வைரலாகும் தனது மீம்ஸ் தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் மாளவிகா மோகனன் கூறியிருப்பதாவது:

"என்னைப் பற்றிய மீம்ஸ் திருவிழாவை நான் சற்று தாமதமாகத்தான் பார்த்திருக்கிறேன். இது மிகவும் நகைச்சுவையாக இருக்கிறது மக்களே. என்னை நன்றாகச் சிரிக்க வைத்த, எனக்குப் பிடித்தமான சில மீம்ஸை நான் பகிர்கிறேன். அந்த டூத்பேஸ்ட் மீமைப் பார்த்து நான் விழுந்து விழுந்து சிரித்தேன். உங்களைப் பார்த்து உங்களால் சிரிக்க முடியாவிட்டால் வாழ்க்கை மிகவும் போர் அடிக்கும் இல்லையா?"

இவ்வாறு மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.

'மாஸ்டர்' படத்தைத் தொடர்ந்து, கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் மாளவிகா மோகனன்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in