இனி திருமணம் குறித்த கேள்விகள் வேண்டாம்: அஸீம்

இனி திருமணம் குறித்த கேள்விகள் வேண்டாம்: அஸீம்
Updated on
1 min read

இனி திருமணம் குறித்த கேள்விகள் வேண்டாம் என்று அஸீம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

‘பிரியமானவள்’, ‘பகல் நிலவு’, ’தெய்வம் தந்த வீடு’, ’கடைக்குட்டி சிங்கம்’ உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்துப் பிரபலமானவர் அஸீம். இதில் 'கடைக்குட்டி சிங்கம்' சீரியலில் ஷிவானியுடன் நடித்திருந்தார். மேலும், விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நிகழ்ச்சியிலும் ஷிவானியுடன் கலந்துகொண்டார்.

ஏற்கெனவே அஸீமுக்கு சல்மா என்பவருடன் திருமணமாகி ஒரு மகன் இருக்கிறார். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்துவிட்டதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், இது தொடர்பாக அஸீம் எந்தவொரு தகவலுமே வெளியிடாமல் இருந்தார்.

சில மாதங்களுக்கு முன்பு பிக் பாஸ் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளார் அஸீம் என்று தகவல் வெளியானது. அப்போது பல்வேறு காரணங்களால் தன்னால் கலந்துகொள்ள இயலவில்லை என்று தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில், தனக்கு விவாகரத்து ஆகிவிட்டதை உறுதி செய்துள்ளார் அஸீம். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பிரிவில் அஸீம் கூறியிருப்பதாவது:

"வணக்கம். இரு தரப்பு சம்மதத்துடன் நீதிமன்றம் மூலமாக, அதிகாரபூர்வமாக நான் விவாகரத்து பெற்றுவிட்டேன் என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இனி எனது திருமணம் குறித்த எந்தத் தனிப்பட்ட கேள்விகளையும் கேட்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்"

இவ்வாறு அஸீம் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in