

'பாயும் புலி' படத்தைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படத்தின் நாயகனாக ஜெயம் ரவி ஒப்பந்தமாகி இருக்கிறார்.
விஷால், காஜல் அகர்வால், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிக்க, சுசீந்திரன் இயக்கத்தில் உருவான படம் 'பாயும் புலி'. இமான் இசையமைத்திருந்த இப்படத்தை வேந்தர் மூவிஸ் நிறுவனம் தயாரித்தது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை.
இயக்குநர் சுசீந்திரன் தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார். அக்கதையின் நாயகனாக ஜெயம் ரவி ஒப்பந்தமாகி இருக்கிறார். அவருடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
'மிருதன்', 'ரோமியோ ஜூலியட்' இயக்குநர் லட்சுமணன் இயக்கும் படம் ஆகியவற்றைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் ஜெயம் ரவி.