

சிவாஜியின் பேரன் தர்ஷன் நாயகனாக நடிக்கவுள்ளார். இதற்காகக் கதைகள் கேட்கும் படலம் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்கள் அனைவருமே சிவாஜியின் குடும்பத்தை மிகவும் மதிப்பார்கள். அந்தக் குடும்பத்திலிருந்து பிரபு, விக்ரம் பிரபு உள்ளிட்ட அனைவருமே நடிகர்களாக வலம் வருகிறார்கள். மேலும், படத் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
தற்போது சிவாஜியின் குடும்பத்திலிருந்து மேலும் ஒருவர் நாயகனாக அறிமுகமாகவுள்ளார். சிவாஜியின் மூத்த மகனான ராம்குமாரின் மகன் தர்ஷனை நாயகனாக நடிக்க வைக்கக் கதைகள் கேட்கும் படலம் தொடங்கப்பட்டுள்ளது.
இதற்காகப் பல்வேறு இயக்குநர்கள் கதைகள் சொல்லி வந்தார்கள். தற்போது இயக்குநர் சீனு ராமசாமி கூறிய கதை மிகவும் பிடித்துவிடவே, அந்தக் கதையை ஒகே செய்திருப்பதாகக் கூறுகிறார்கள். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.