காதலருடன் நக்‌ஷத்ராவுக்குத் திருமண நிச்சயதார்த்தம்

காதலருடன் நக்‌ஷத்ராவுக்குத் திருமண நிச்சயதார்த்தம்
Updated on
1 min read

காதலர் ராகவ்வுடன் நக்‌ஷத்ராவுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. விரைவில் திருமணத் தேதியை முடிவு செய்யவுள்ளனர்.

தொலைக்காட்சித் தொகுப்பாளராகத் தொடங்கி பின்பு சீரியல்களில் நடிகையாக அறிமுகமானவர் நக்‌ஷத்ரா. 'வாணி ராணி', 'லட்சுமி ஸ்டோர்ஸ்', 'ரோஜா', 'நாயகி' என இவர் நடித்த பல்வேறு சீரியல்கள் மிகவும் பிரபலம்.

சீரியல்கள் மூலம் கிடைத்த பிரபலத்தை வைத்து பல்வேறு பட வாய்ப்புகளும் நக்‌ஷத்ராவுக்குக் கிடைத்தன. அதன் மூலம் 'சேட்டை', 'வாயை மூடி பேசவும்', 'இரும்பு குதிரை', 'நம்பியார்', 'மிஸ்டர் லோக்கல்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். டிவி மற்றும் சினிமா என இரண்டிலுமே பிரபலமாக வலம் வருகிறார் நக்‌ஷத்ரா.

தற்போது அவருக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. பள்ளிக் காலத்திலிருந்தே தனக்குப் பழக்கமான ராகவைத்தான் காதலித்து வந்துள்ளார். இருவரது வீட்டிலும் காதலுக்குச் சம்மதம் தெரிவிக்கவே, திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. எப்போது திருமணம் என்பதை விரைவில் அறிவிக்கவுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in