Published : 26 Jan 2021 01:52 PM
Last Updated : 26 Jan 2021 04:29 PM
அகத்தியனின் மூன்றாவது மகளான நிரஞ்சனி அகத்தியனுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
அஜித், தேவயானி நடிப்பில் 1996ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் 'காதல் கோட்டை'. இப்படத்தை இயக்கியவர் அகத்தியன். இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இவரது முதல் முகள் பெயர் கனி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். இவர் ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’, ‘சமர்’, ‘நான் சிகப்பு மனிதன்’ உள்ளிட்ட படங்களின் இயக்குநர் திருவின் மனைவி.
அகத்தியனின் இரண்டாவது மகள் விஜயலட்சுமி. ‘சென்னை -28’ படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதன் பிறகு பல்வேறு திரைப்படங்களில் நடித்தார். ‘பண்டிகை’ படத்தை இயக்கிய ஃபெரோஸ் என்பவரைத் திருமணம் செய்துள்ளார்.
அகத்தியனின் மூன்றாவது மகளான நிரஞ்சனி அகத்தியன் கடந்த ஆண்டு துல்கர் சல்மான் இயக்கத்தில் வெளியான ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படப்பிடிப்பு சமயத்தில் அப்படத்தை இயக்கிய தேசிங் பெரியசாமிக்கும் நிரஞ்சனிக்கும் இடையே காதல் மலர்ந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இவர்களின் காதலுக்கு இரு வீட்டிலும் பச்சைக் கொடி காட்டிவிட்டதால் நிரஞ்சனி - தேசிங் பெரியசாமி இருவருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் வரும் பிப்ரவரி 25 அன்று சென்னையில் திருமணம் நடைபெறவுள்ளது.
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ??
— Thiru (@dir_thiru) January 26, 2021
கல்யாணம் !! ❤️@desingh_dp @Niranjani_Nini pic.twitter.com/eTqRd3xOFm
Sign up to receive our newsletter in your inbox every day!